புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றதாதைக் கண்டித்து இந்திரா காந்தி சிலை அருகே பாஜகவினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல் சுரானா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில், மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன், பாஜக தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வீட்டில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக இதை நிறைவேற்ற தவறிவிட்டது என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது, திடீரென தேர்தல் வாக்குறுதி நகலை தீயிட்டு எரித்தனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக இந்திரா காந்தி சிலை அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கொடும்பாவி எரிப்பு!