ETV Bharat / city

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரிப்பதை கண்டித்து நாளை பாஜக போராட்டம்

சென்னை: இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரிப்பதை கண்டித்து பாஜக, இந்து ஆர்வலர்கள் தங்களது வீடுகளின் முன்பு நாளை அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரிப்பதை கண்டித்து  நாளை பாஜக போராட்டம் - எல் முருகன் அறிவிப்பு!
author img

By

Published : Jul 15, 2020, 11:29 PM IST

சென்னையில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஜூலை 15) மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜருடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், ”அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து வரும் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை தடை செய்ய வேண்டும். அதன் இயக்குனர் சுரேந்திரன் நடராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து கடவுள்களையும் சமூக அமைதியை சீர்குலைக்கும் செயல்களையும் கட்டுப்படுத்த இணையத் தொடர் மட்டும் சமூக வலைதளங்களுக்கு தணிக்கை அவசியம் என்று பொதுமக்கள் விரும்பினால் பாஜக ஆதரவாக இருக்கும்.

இதுபோன்ற செயல்களை கண்டித்து பாஜக, இந்து மத ஆர்வலர்கள் நாளை தங்களது வீட்டின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.