ETV Bharat / city

தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல - பொன்னையன் - தமிழ்நாட்டில் பாஜக வளர நினைக்கிறது

தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல. அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியுள்ளார்.

பொன்னையன்
பொன்னையன்
author img

By

Published : Jun 1, 2022, 1:31 PM IST

சென்னை: அதிமுக அம்மா பேரவை உறுப்பினர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இரண்டாம் நாளாக நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மூத்த நிர்வாகிகள் பொன்னையன், அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார், கே.பி அன்பழகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் கூட்டத்தில் பேசுகையில், அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்புகிறது. பாஜக, அதிமுகவின் கூட்டணி கட்சி தான் என்றாலும் கூட அக்கட்சி தமிழ்நாட்டில் வளர்வது என்பது அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும், தமிழ்நாடு நலனுக்கும் நல்லதல்ல.

காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாடு உரிமைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் கர்நாடக பாஜகவை தமிழ்நாடு பாஜக கண்டிக்காமல் மௌனம் காக்கிறது. இதனால் பாஜக தான் எதிர்க்கட்சி என்ற சமூக வலைதள பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் இரட்டை வேடம் போடும் பாஜகவை அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு தமிழ்நாட்டில் பாஜக வளர நினைக்கிறது என்று குற்றம் சாட்டிய பொன்னையன், அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை பாஜக மறைமுகமாக செய்து வருவதாகவும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி பேரணி- அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.