ETV Bharat / city

ஒருவழியாக அரசுப் பள்ளி பயோமெட்ரிக் கருவியில் தமிழ் மொழி - பயோமெட்ரிக் கருவியில் தமிழ் மொழி

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது.

biometric
author img

By

Published : Jul 28, 2019, 4:37 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் வருகைப் பதிவினை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்துவருகின்றனர். கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட இந்த பயோமெட்ரிக் கருவியில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் பெயர்கள் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு கட்சியினரும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தேசிய தகவலியல் மையத்தினை தொடர்புகொண்டு பேசினர். அதனடிப்படையில் தற்பொழுது தமிழ் மொழியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், ”தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய எட்டு மொழிகளும் இடம்பெற்றுள்ளன” என்றார்.

Intro:தமிழ் மொழியில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை
ஆசிரியர்கள் வரவேற்பு
Body:
சென்னை, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தினமும் தங்களின் வருகைப் பதிவினை பயோமெட்ரிக் முறையில் வைத்து வருகின்றனர். அதில் சில தினங்களுக்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் வருகிறது என கூறினர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தகவிலியல் மையத்தினை தொடர்பு கொண்டு பேசினர். இதன் அடிப்படையில் தற்பொழுது தமிழ் மொழியில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறியதாவது, பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு நடைமுறைபடுத்த ஜுன் 3 ம் தேதி முதல் அறிமுகம் செய்த போது ஆங்கில மொழியில் மட்டுமே நடைமுறையில் இருந்தது. கடந்த வாரம் இந்த இணைய தள சேவையில் இந்தி மொழியும் இணைக்கப்பட்டது இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
தமிழ் மொழியில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்தார். அதன் பேரில் தற்போது பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை தமிழ் மொழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு மாநில மொழிகளிலும் இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய 8 மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி பயோமெட்ரிக் வருகை பதிவு முறையில் திறந்த உடன் உள்ளிடவும் 8 இலக்க வருகை ஐடி, என கேட்கிறது 8 இலக்க ஐடி பதிவு செய்தவுடன் விரல் கைரேகை ஸ்கேனர்மீது இடவும் என தகவல் தருகிறது. கைரேகை பதிவு ஏற்கப்பட்டஉடன் வருகை வகை, நேரம் திறக்கிறது, நேரம் முடிகிறது, பதில் நேரம், உள்ளிட்ட விவரங்களை தருகிறது என கூறினார்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.