கரோனா தொற்றுப் பரவலில் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திட வழிவகை செய்யும்விதமாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
இது குறித்து மருத்துவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், "கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதுடன் சுகாதாரப் பணியாளர்கள் மீதான பணி அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் போன்ற அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பீட்டா இந்தியாவும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் முடிவை கைவிடுமாறு மாநில அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இதையும் படிங்க: செம்மரக்கட்டை கடத்தல்: சசிகலா உறவினர் கட்டை பாஸ்கர் கைது