சென்னை: தாம்பரம் அடுத்த சோமங்கலம் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (31). இவர் நேற்று முன்தினம் (ஏப்.12) இரவு காரில் தாம்பரம் காந்தி சாலை வழியாக வீட்டிற்கு அதிவேகத்தில் சென்றுள்ளார்.
அப்போது ரங்கநாதபுரம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூன்று பேர் மீது மோதியுள்ளார். இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து தனசேகர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். உடனே பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சோனியா (24), காஞ்சனா (23), ராஜசேகர் (58) ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிவேக பயணம் உயிரைப் பறிக்கும்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!