ETV Bharat / city

வலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழர்: உறவினர்கள் உற்சாக வரவேற்பு

author img

By

Published : Dec 31, 2021, 7:10 PM IST

Updated : Dec 31, 2021, 9:27 PM IST

துருக்கியில் நடந்த வலு தூக்கும் போட்டியில் மூன்று தங்கம், ஒரு வெண்கலம் வென்று சென்னை திரும்பிய வீரரை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

சென்னை: துருக்கி இஸ்தான்புல் நகரில் ஆசிய வலு தூக்கும் போட்டி நடந்தது. இங்கு நடந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த வீரர் நவீன் கலந்துகொண்டு 93 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம், ஸ்குவாட் பிரிவில் 330 கிலோ, பெஞ்ச்பரஸ் பிரிவில் 182.5 கிலோ, டெட்லிப்ட் பிரிவில் 305 கிலோ என 817.5 கிலோ வலு தூக்கி முதல் இடத்தைப் பிடித்தார்.

இந்தப் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம், ஒரு வென்கலம் பெற்றார். இதையடுத்து துருக்கியிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த வீரர் நவீனுக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது பெற்றோர், நண்பர்கள், வலு தூக்கும் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

விமான நிலையத்தில் வீரரை அவரது உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்

பின்னர் நவீன் செய்தியாளரிடம் கூறுகையில், ”இந்தியாவிலிருந்து வலு தூக்கும் போட்டியில் 64 பேர் கலந்துகொண்டோம். தமிழ்நாட்டிலிருந்து 28 பேர் பங்கேற்றனர். இதில் 12 பேர் வரை பதக்கம் வென்றுள்ளோம்.

கஜகஸ்தான், ஜப்பான், ஈரான் ஆகிய நாட்டு வீரர்களுடன் போட்டியிட்டேன். மூன்று தங்கப்பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்றேன். போட்டியில் கலந்துகொள்ள செல்லும் முன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றேன்.

கரோனா பரிசோதனை செய்த பின்னர்தான் குவைத், இஸ்தான்புல்லில் அனுமதித்தனர். டெல்லியில் சோதனை செய்த பின்தான் அனுமதிக்கப்பட்டோம். கரோனா வழிகாட்டு விதிமுறைகளுடன்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.

கல்வி மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று பதக்கம் பெறுவேன். அதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் உதவிட வேண்டும்” எனக் கோரிக்கைவைத்தார்.

இதையும் படிங்க: கனமழை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி இன்று விடுமுறை

Last Updated : Dec 31, 2021, 9:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.