ETV Bharat / city

'அத்திவரதர் இருக்கும் குளத்தை மழைநீர் கொண்டு நிரப்புங்கள்' - உயர் நீதிமன்றம்

சென்னை: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை மழைநீர் அல்லது ஆழ்துளை கிணற்று நீர் மூலம் நிரப்ப மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை
author img

By

Published : Aug 19, 2019, 7:02 PM IST

Updated : Aug 20, 2019, 12:32 AM IST

சென்னையைச் சேர்ந்த அசோகன் என்பவர், சில நாட்களுக்கு முன்பு அனந்தசரஸ் குளத்தை தூர்வாரக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய மூன்று துறைகளும், அனந்தசரஸ் குளத்தை தூர்வார்தல் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டார்.

அதற்கு பதிலளித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அனந்தசரஸ் குளம் தற்போது முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது என்றும், எனவே மழைநீரால் குளம் நிரம்பாவிட்டால் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் நீர் மூலம் குளம் நிரப்பப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இதற்கு பதில் கூறிய நீதிபதி ஆதிகேசவலு, பொற்றாமரை குளத்தின் நீரைக் கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டாம் என்றும், மாறாக இயற்கையாக கிடைக்கக்கூடிய மழைநீர் அல்லது கோயில் வளாகத்தில் இருக்கும் ஆழ்துளை கிணற்று நீர் ஆகியவற்றின் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Intro:Body:காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளை கிணற்று தண்ணீர் மூலம் நிரப்ப மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரை சேர்ந்த அசோகன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை 48 நாள் பக்தர்கள் தரிசனத்திக்காக, வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாசுக்கட்டைப்பாட்டு வாரியம் சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதனால் குளத்தை மழை நீர் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் மூலம் தண்ணீர் எடுத்து நிரப்பலாம். அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் குளத்தை நிரப்ப கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அத்திவரதர் சிலை உள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து நிரப்ப கூடாது.

இயற்கையாக கிடைக்கும் மழைநீர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 22 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். Conclusion:
Last Updated : Aug 20, 2019, 12:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.