ETV Bharat / city

கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை - பக்தர்கள் வரவேற்பு - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நேற்றுமுதல் (ஆக .05) அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது.

கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை

author img

By

Published : Aug 6, 2021, 5:25 PM IST

Updated : Aug 6, 2021, 6:17 PM IST

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

மேலும், தமிழில் அர்ச்சனை செய்யும் குழுக்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் அடங்கிய விவரங்களைக் கொண்ட பெயர்ப் பலகையையும் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் 47 திருத்தலங்களிலும், தமிழில் அர்ச்சனை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

மேலும், கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய ரூ. 5 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

60 ஆண்டுகளாக தமிழ் அர்ச்சனை பயணம்: கடந்து வந்த பாதை

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்ற விவகாரம் கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலும், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என 1955ஆம் ஆண்டு முதலே போராட்டங்கள் நடந்துள்ளன.

கபாலீஸ்வரர் கோயில்

குன்றக்குடி மடத்தின் அப்போதைய ஆதினம் தெய்வசிகாமணி அருணாச்சல தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள், தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருந்துள்ளார். இதேபோல்,

  • லால்குடி பூவாளூர் கிராமத்தில் உள்ள திருமூலநாத சுவாமி கோயிலில் 1969இல் தமிழில் அர்ச்சனை நடத்தப்பட்டது.
  • அனைத்துக் கோயில்களும் தமிழில் அர்ச்சனை எனப்படும் முறையை 1971ஆம் ஆண்டு அப்போதைய அறநிலைத் துறை அமைச்சர் கண்ணப்பன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதை ஆதரித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.

  • கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யவேண்டும் என 1924இல் அறநிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

பின் அது திரும்பப்பெறப்பட்டது.

  • எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் 1980இல் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் கோயில்களில் தமிழ் அர்ச்சனையை வலியுறுத்தினார்.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1982இல் தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படும் என அறங்காவலர் குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"1998இல் முதலமைச்சராக இருந்த கருணாநிதி சட்டப்பேரவையில் கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருப்பதற்கு எதிர்ப்பவர்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதே நேரத்தில் வேறு மொழிகளில் கடவுளை வழிபடக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை" என்றார்.

தமிழில் அர்ச்சனை

இதுகுறித்து நம்மிடம் பேசிய குருக்கள் பாலாஜி, "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைப் பொறுத்தவரை 1971ஆம் ஆண்டிலேயே தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் அனைத்து வேலை நாள்களிலும் அனைத்து சந்நிதிகளிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.

மேலும், இக்கோயிலில் நாயன்மார்கள், திருநாவுக்கரசர் அருளிய போற்றித் திருத்தாண்டகம், மாணிக்கவாசகர் அருளிய போற்றித் திருஅகவலில் இருந்த போற்றிகள் கொண்டு தமிழ் அர்ச்சனை செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

அனைவரும் வரவேற்கிறோம்

பின்னர் பக்தர்கள் செல்வி, பரிமளா அளித்த பேட்டியில், "சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யும்போது தங்களுக்குப் புரியாதபடி இருந்த நிலையில், தமிழில் அர்ச்சனை செய்வதால், எங்களுக்குத் திருப்தியாக உள்ளது. எளிதில் புரிந்து கொள்ளும்படியும் உள்ளது.

தமிழில் அர்ச்சனை, நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம். மனநிறைவுடன் இறைவனைத் தொழ முடிகிறது. மேலும் சமூக இடைவெளியுடன் நாங்கள் இறைவனை தரிசிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஆக.9 ஆம் தேதி முதல் கல்லூரிக்கு ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு'

Last Updated : Aug 6, 2021, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.