ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சி குறித்து சென்னை அரும்பாக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னையில், நிழச்சி நடத்தும் போது தனி உற்சாகம் வருகிறது, இரண்டு மாதங்களுக்கு மேல் இதற்காக உழைத்து இருக்கிறோம். எனவே இந்நிகழ்ச்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும். இந்நிகழ்ச்சியில் புது புது பாடல்கள், பாடகர்கள் என இருக்கும். அதிகப்படியாக தமிழ் பாடல்கள், இந்தி பாடல்களும் இடம் பெறும். இது நம்ம ஊரு சென்னை அதனால் உத்வேகம் உற்சாகம் இருக்கும். ஊர்வசி ஊர்வசி பாடல் சிறிது மாற்றம் செய்தும், பிகில் படத்திலிருந்து ஒரு பாடலையும் பாடவுள்ளோம். பென்னி, ஹரிசரண் உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். இது இசை நிகழ்ச்சி மட்டுமே தீம் எதுவுமில்லை.
உங்கள் மனகனுக்கு உங்கள் அறிவுரை!
என் மகனுக்கு அறிவுரை வழங்குவதை நான் நிறுத்தி விட்டேன், அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது. கூகுல் உள்ளிட்டவற்றின் மூலம் பலவற்றை கற்று கொள்கிறார்கள்.