ETV Bharat / city

ஊழல் ஒழிப்பு வாக்குறுதிகள்! கட்சிகளுக்கு அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்! - அறப்போர் இயக்கம் அறிக்கை

சென்னை: அரசியல் கட்சிகள் ஊழலை ஒழிப்பதற்கு என்ன மாதிரியான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் இணைத்து வெளியிட வேண்டும் என்பது குறித்து அறப்போர் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

iyakkam
iyakkam
author img

By

Published : Dec 21, 2020, 7:35 PM IST

சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம், ” தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் அறிக்கை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன. அதில், லஞ்சத்தை ஒழிப்பதற்கு என்ன வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஊழல் ஒழிப்புக்கான மாற்றாக நாங்கள் மூன்று விசயங்களை முன்வைத்துள்ளோம்.

(1) வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை உறுதி செய்ய வேண்டும்:

  • அதில் தகவல் உரிமை சட்டத்தை ஆன்லைனில் கொண்டு வர வேண்டும்.
  • டெண்டர்களை முழுக்க மின்னணுவாக்க வேண்டும்.
  • டெண்டர் விடுவதற்கு முன்பு அதிகாரிகளை யாரும் சந்திக்க முடியாத அளவுக்கு திருத்தம் கொண்டு வர வேண்டும்.
  • ஊழல் விசாரணையை நடத்த உயர் அதிகாரியின் அனுமதி தேவை என்ற கூற்றை அகற்ற நாடாளுமன்றத்தில் அழுத்தம் தர வேண்டும்.
  • கிரானைட், தாது மணல் மற்றும் சட்டவிரோத மணல் கடத்தல் ஆகியவை மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(2) ஊழல் தடுப்பு இயக்கங்களை தன்னிச்சையாக மாற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்:

  • தமிழ்நாடு லோக் ஆயுக்தாவை தன்னிச்சையான விசாரணை அமைப்பாக ஆக்க தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் 2018ல் சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டும்.
  • அரசியல் கட்சிகள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டும்.
  • அரசியல் கட்சி செலவில் உற்ற, பெற்ற தொகை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஊழல் ஒழிப்பு வாக்குறுதிகள்! கட்சிகளுக்கு அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்!

(3) மக்கள் பங்கேற்பை உறுதி படுத்துதல்:

  • நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து வார்டு, ஏரியா சபைகளை உருவாக்கி அதற்கான அதிகாரங்களை கொடுக்க வேண்டும்.
  • 144 தடைப்பிரிவு மற்றும் மாநகர காவல் சட்டம் பிரிவு 41 போன்றவற்றை தவறாக பயன்படுத்தி, மக்களின் பேச்சுரிமை மற்றும் ஒன்று கூடும் உரிமைகளை மறுக்கக் கூடாது.
  • ஒருவர் மீது வழக்குப்பதியப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு இருக்குமானால், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

இது போன்ற சட்டத்திருத்த வாக்குறுதிகளை, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டும் “ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: அதிமுக எம்எல்ஏ., மீது குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.