ETV Bharat / city

வேல்ஸ் கல்லூரி குழுமத்தலைவர் ஐசரி கணேஷ் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரி குழும நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வேல்ஸ் கல்லூரி குழும தலைவர் ஐசரி கணேஷ் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

author img

By

Published : Sep 13, 2022, 5:07 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்கில் தான், வேல்ஸ் கல்லூரி குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐசரி கணேஷுக்குச்சொந்தமான வேல்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு தரச்சான்றிதழ் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக ஐசரி கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையில், புதிய கல்லூரி முறைகேடு வழக்கில் இரண்டாவது நபராக ஐசரி கணேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் மேலும் 4 மருத்துவப் பேராசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஐசரி கணேஷுக்குத் தொடர்புடைய தாம்பரம்,பல்லாவரம் ஆகிய இடங்களிலும் நந்தனம் பகுதியில் உள்ள வேல்ஸ் கல்லூரிக்குச் சொந்தமான கார்ப்பரேட் நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஐசரி கணேஷ் இல்லத்தில் டிஎஸ்பி சங்கர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ள உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி,சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.