தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து கடந்த ஒரு மாத காலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனுர். அந்த வகையில் இன்று (ஜூன்.14) மீண்டும் 39 ஐஏஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை இணை செயலாளராகவும், திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலாளராகவும், திண்டுக்கல் ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி மீன்வளம், பால்வளத்துறை இணை செயலராகவும், கரூர் ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.