சென்னை: இது குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் தளத்தில்,
- 'எமது அரசில் மிக முக்கியமான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடும் தேசிய ஒதுக்கீட்டுத் திட்டத்தில் இளநிலை, முதுநிலை மருத்துவப் பல் மருத்துவ நுழைவுத்தேர்வில் நடப்பாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்'
பாஜக ஆட்சி - சமூகநீதியில் புதிய புரட்சி
என்று 2021 ஜூலை 29 மதியம் 3.35-க்கு அறிவித்தபோது சமூக நீதியில் ஒரு புதிய புரட்சி; ஒரு புதிய வரலாறு பாஜக ஆட்சியில் படைக்கப்பட்டது. மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பினை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு சலோனி குமார் என்பவர் தாக்கல்செய்த ரிட் மனு எண்டிக்கு பதிலளிக்கும்போது எதிர் மனுவைத் தாக்கல்செய்த மத்திய அரசு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக எழுத்துப்பூர்வமாகக் கூறியிருந்தனர். ஆகவே உச்ச நீதிமன்றத்தின் தடையற்ற ஒப்புதலை இதற்கு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
2020 ஜூலை 13ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன சட்டப்படி வழங்கப்படும் உரிமை இல்லை என்பதையும், அரசு உத்தரவின்பேரில் வழங்கப்படும் அரசின் ஆணை என்பதையும் கருத்தில்கொண்டது.
திமுகவின் அவமதிப்பு மனுவும், மோடியின் இட ஒதுக்கீடு அறிவிப்பும்
இடஒதுக்கீடு வழங்க தான் தயாராக இருப்பதாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தாக்கல்செய்த உறுதியான பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கிற்கான மனுவை ஏற்றது. ஒருவேளை பாஜக மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்கத் தயாராக இருக்கிறோம் என்ற பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல்செய்யாது இருந்திருந்தால், 14 ஆண்டுகளுக்குப் பின் உறக்கம் விழித்தவர்கள் தாக்கல்செய்த இந்த வழக்கு, முகாந்திரம் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்.
இதற்கிடையில் இந்திய மருத்துவ ஆணையம், மருத்துவப் பணிகள் இயக்குநர் ஜெனரல் மற்றும் பலர் அடங்கிய குழுவை அமைத்து ஓபிசி இட ஒதுக்கீட்டின் விகிதத்தை நிர்ணயம் செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்றத்தின் தலையீடை வேண்டி, இந்தக் குழுவின் அறிக்கை தாக்கல்செய்யப்படும்போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை விளக்கி திமுக சார்பில் அவமதிப்பு மனுவும் தாக்கல்செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திடமிருந்து எந்த நிவாரணமும் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்கப்படும் விகிதத்தில் முடிவெடுக்கலாம் என்று கருதியது. அதே வேளையில் அகில இந்திய அளவில் ஓபிசி, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பிரதமர் அறிவிக்கிறார்.
திமுகவின் வேடிக்கை - கதறுவோரைப் பார்க்க பரிதாபம்
பிறகு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, 2022 ஜனவரி 7 தேதியிட்ட இடைக்கால உத்தரவில், நடப்பு ஆண்டிற்கு தொடர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது கீழ்காணுமாறு வரையறுக்கப்பட்டது.
- நீட்- யு.ஜி. (எம்.பி.பிஎஸ் படிப்புகள்) மற்றும் 50 விழுக்காடு AD இடங்களில் அக்டோபர் முதல் முறையாக 2021-22ஆம் ஆண்டிற்கான 50 விழுக்காடு AC இடங்கள் (MD) கீழ் 50 விழுக்காடு A/C இடங்கள் 25 மற்றும் 10 விழுக்காடு EWS இட ஒதுக்கீடு.
ஆகவே 2015ஆம் ஆண்டிலேயே தனது கொள்கை முடிவினை பாரதிய ஜனதா அரசு தெளிவாக எடுத்துரைத்துவிட்டது. அதில் ஓபிசி அதற்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கூறப்பட்டுள்ளது. தனக்கு தடையுமில்லை என்று தற்போது யார் யாரோ உறக்கம் கலைந்துவந்து தங்களால்தான் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்தது, இந்திய நாட்டிற்கே தாங்கள்தான் முன்னோடி முன்மாதிரி எல்லாம் பேசுவதைக் கேட்க வேடிக்கையாக உள்ளது.
2004-14இல் ஆட்சியில் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அப்போதே அவர்கள் இந்த ஒதுக்கீட்டைச் செய்திருக்கலாமே! அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகத்தானே திமுக அமைச்சர் இருந்தார். தன்கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்தபோது எதுவும் செய்யாமல் எதிர் கட்சிக்கு எந்த நல்ல பெயரும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் சுதறும் நபர்களைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
அடுத்த வீட்டு நெய் மணத்திற்கு ஆசை - அற்ப சிந்தனை
வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மத்திய அரசு தனது கொள்கை முடிவை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்ததால் இந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றத்தின் அங்கீகாரத்துடன் கட்டமைத்த முழு பெருமையும் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே உண்டு.
மற்றவரெல்லாம் அடுத்த வீட்டு நெய் மணத்திற்கு ஆசைப்படும் அற்ப சிந்தனையாளர்களாகத்தான் கருதப்படுவர். உழைப்பைத் திருட முயற்சித்துக் கதறும் உடன்பிறப்புகளுக்கு ஒரு சில கேள்விகள்:
- A/NQ மருத்துவ இடங்களில் SCST களுக்கு இடஒதுக்கீடு கோரி 2007 ஆம் ஆண்டு அபய்நாத் வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தபோது SC5T களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக அப்போதைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசாங்கம் தெளிவாகத் தெரிவித்தது. OBCக்கான இடஒதுக்கீட்டிற்கான விருப்பமோ அல்லது அதை நிறைவேறும் முனைப்போ, அப்போது தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஒபிசி இடஒதுக்கீட்டிற்காக நீதிமன்றத்தை நாடுவது அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. ஒபிசி இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக அபய்நாத் வழக்கில் உச் நீதிமன்றத்தில் நிலைப்பாட்டை மாற்றவோ மறுக்கவோ ஏன் அப்போதைய திமுக காங்கிரஸ் ஆட்சி தயாராக இல்லை. 2 இன்னம் சொல்லப்போனால் இந்திய தேசிய ஒதுக்கீடு 1984 இல் OBC
- இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிகள் தொடங்கப்பட்டதிலிருந்து 2014 இல் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் வரை திமுக கூட்டணி அரசு எந்த முன்முயற்சியும் அல்லது நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் நம்ம மோடி அவர்களின் அரசு, மத்திய நிறுவனங்களுக்கு இணையான AIQ மருத்துவ இடங்களில் (CBC களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று நீதி மன்றத்தில் அரசு எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது
- இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழி காட்டும், எந்தவொரு சட்டமும் இல்லாத நிலையில், இடஒதுக்கீடு சட்டப்படி உரிமைக்குரிய விஷயம் அல்ல என்றும், இது ஆட்சியில் உள்ள அரசின் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் கூடிய கொள்கை முடிவு என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளதால், OBC சுளுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கிய பெருமையை எவரும் கடன் வாங்க முடியாது.
- /A/Q இல் OBC: இடஒதுக்கீட்டிற்காக மத்திய பாஜக அர்சு வழங்கிய பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்த உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது என்பதை நீதிமன்றமே உணர்த்திய பின்னும், இன்று அது எந்த அடிப்படையில் பாஜக ஆட்சியில், பாஜகவின் உத்தரவிற்கு பிற விளக்கட்டும்? கட்சிகள் சொந்தம் கொண்டாடுகிறது என்பதை.
- 4.1.2007 இல் UPA அரசாங்கம் மத்திய நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டிற்கான அரசு உத்தரவை மட்டும் இயற்றிவிட்டு இத்தனை ஆண்டுகாலம் அதை ஆட்சியில் இருந்தபோது அமல்படுத்தாமல், இப்போதுதான் உறக்கம் கலைகிறார்கள் அப்போதே உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அவர்களை யார் தடுத்தது?
சமூகநீதிக் காவலர் பெரியராக மோடி
ஆகவே காங்கிரஸ், திமுக ஆட்சியில் செய்யத்தவறிய அல்லது செய்ய இயலாத செயற்கரிய செய்த பெரியராக நம்ம பிரதமர் நரேந்திர மோடி இந்த வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார். அவரே உண்மையான 'சமூக நீதிக் காவலர்'.
மேலும், OBCக்கான தேசிய இடஒதுக்கீட்டை 27%ஆக முன்மொழிந்த பாரதிய ஜனதா கட்சி அரசின் முடிவை அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி, உழைப்பைத் திருட முயற்சித்துக் கதறும் உடன்பிறப்புகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருச்சி மாநகராட்சி மேயர் பதவி: கே.என். நேரு மனசுல யாரு?