ETV Bharat / city

'6 மணி நேரம் இங்குதான் இருப்பேன், முடிந்தால் கைது செய்யுங்கள்'- அண்ணாமலை சவால் - 610 கோடி இல்லை ஆடு இருக்கு

திமுகவினர் இதுவரை ரூ.610 கோடி கேட்டு எனக்கு அவதூறு நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளனர். என்னிடம் ரூ.610 கோடி இல்லை, ஆடு, மாடுகள்தான் உள்ளன. அதிமுக அமைச்சரை மிரட்டியதற்கு ஆதாரம் இருந்தால் அடுத்த 6 மணி நேரத்தில் என்னை கைது செய்யுங்கள். நான் இங்கேதான் இருப்பேன் என அண்ணாமலை திமுகவிற்கு சவால் விடுத்துள்ளார்.

தெம்பு இருந்தால் என்னைக் கைது செய்யுங்கள் - அண்ணாமலை சவால்

author img

By

Published : Mar 29, 2022, 3:17 PM IST

Updated : Mar 29, 2022, 5:56 PM IST

சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பிப்ரவரி 2 ஆம் தேதி திமுக குடும்பத்தை சார்ந்த 9 நபர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றுள்ளனர். அந்த பயணத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், குடும்ப ஆடிட்டர் சண்முகராஜ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

அந்த பயணத்தின் போது சபரீசன் யார் யாரை சந்தித்தாரோ அவர்களை எல்லாம் துபாய் சென்ற முதலமைச்சரும் சந்தித்துள்ளார். ரூ.6,100 கோடி மதிப்பீலான திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில், கிட்டத்தட்ட 70 சதவீதம் நிதியை யூசுப் அலி நடத்தும் நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன. இந்த யூசுப் அலியை கடந்த பிப்ரவரி மாதம் சபரீசன் சந்தித்தை ஆதாரத்தோடு வெளியிட்டதற்கு 100 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என வில்சன் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இன்று காலை தான் அந்த நோட்டீஸ் வந்துள்ளது. இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது எனவே நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேலும் அதிமுக அமைச்சர்களை நான் மிரட்டி பணம் வாங்கியுள்ளேன் என திமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இன்னும் 6 மணி நேரம் பாஜக தலைமை அலுவலகத்தில் இருப்பேன், ஆதாரம் இருந்தால் திராணி இருந்தால் முழு போலீஸ் படையையும் பயன்படுத்தி என்னை கைது செய்யுங்கள், இல்லை என்றால் நாளை நீங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் மாட்டிக் கொள்வீர்கள்.

'6 மணி நேரம் இங்குதான் இருப்பேன், முடிந்தால் கைது செய்யுங்கள்'- அண்ணாமலை சவால்

610 கோடி இல்லை.. ஆடு இருக்கு: அதேபோல அவதூறு வழக்கிற்கு எல்லாம் நான் பயபடமாட்டேன், தொட்டம்பட்டியில் இருந்து வந்துள்ள என் மீது கை வைத்து பார்க்கட்டும். 1000 அவதூறு வழக்குகள் தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இதுவரை 610 கோடிக்கு என் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்னிடம் ஆடு, மாடுகள் தான் உள்ளன. ஆர்.எஸ் பாரதிக்கு அடிப்படை அறிவு கூட இல்லை.

முதலமைச்சர் அல்லது advocate general தான் எனக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்ப முடியும் என்பது கூட தெரியாமல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பி.ஜி.ஆர் நிறுவனத்தால் அரசுக்கு நட்டம் தான் ஏற்படும் எனத் தெரிந்தும், அந்த நிறுவனத்திற்கு தான் டேன்ஜட்கோ அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

பி.ஜி.ஆர் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் மின் திட்டங்கள் நஷ்டத்தில் இயங்கும் என தெரிந்தும் டான்ஜெட்கோ அனுமதி கொடுத்தது ஏன் ? 4472 கோடி மதிப்பு மிக்க திட்டத்தை பி.ஜி.ஆர் நிறுவனத்திடம் கொடுத்தது ஏன் ? தனி விமானத்தில் குடும்பத்துடன், ஆடிட்டர்களுடன் சென்றது துபாய் சென்றது ஏன்?

முதலமைச்சர் ஆசை இல்லை. ஆனால்? மேலும் முதலமைச்சர் ஆக எனக்கு தகுதியில்லை விருப்பம் இல்லை என நானே கூறுகிறேன், ஒரு முதலமைச்சரை உருவாக்கவே இங்கு வந்துள்ளேன். என்னுடைய ஆசை முதலமைச்சரை உருவாக்கி விட்டு சொந்த கிராமத்திற்கு சென்று ஆடு மாடுகளோடு செலவிடும் நேரத்திற்காக காத்துக் கொண்டுள்ளேன்.

83 டாலராக இருந்த ஒரு பேரல் பெட்ரோல் விலை 140 டாலராக உயர்ந்துள்ளது, பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயராது, அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் நினைவு தினம்: 2012ம் ஆண்டு நடந்தது என்ன?

Last Updated : Mar 29, 2022, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.