சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கு வருவது தொடர்பாக, அண்ணா பல்கலைக் கழகத்தின் இலச்சினையுடன் சில மாணவர்களுக்கு இ-மெயில்கள் வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழகம், மாணவர்கள் யாரும் இது போன்று வரும் இ-மெயில்களை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என அண்ணா பல்கலைக்கழகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது. மேலும், குடியுரிமை இல்லாத இந்திய (NIR) மாணவர்களைக் குறிவைத்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் போலியானது.
அண்ணா பல்கலைக்கழக லோகோ இடம்பெற்று, முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாகப் படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியதாக சென்றுள்ள போலி இ-மெயில்கள், குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் கவுன்சிலிங் சேர்க்கை புதிய விதிமுறைகள், நிபந்தனைகள் - என்ன ?