இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லுாரிகளில் 2 ஆண்டுகள் எம்.எஸ்சி, மற்றும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி பட்டப்படிப்பு, எம்.பில். ஆகிய பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் முலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கணக்கு, மெட்டிரியல் சயின்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், அப்ளைடு கெமிஸ்டிரி, அப்ளைடு ஜியோலாஜி, எலக்ட்ரானிக் மீடியா ஆகியப் பாடப்பிரிவுகளில் 2 ஆண்டுகள் எம்.எஸ்சி பட்டப்படிப்பும், ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் எம்.எஸ்சி பட்டப்படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலாஜி, எலக்ட்ரானிக் மீடியா பட்டப்படிப்பும், எம்.பில் பாடத்தில் கணக்கு, இயற்பியல், மெடிக்கல் பிசிக்ஸ், வேதியியல், ஆங்கிலம், கிரிஸ்டல் சயின்ஸ், அப்ளைடு ஜூயோலாஜி ஆகியப் பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரையில் ஆன்லைன் முலம் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். www.annauniv.edu என்ற இணையதளத்தில் மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.