இதுதொடர்பாக, டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் ஆளும் பழனிசாமி அரசும், அதிக எம்.பி.க்களை வைத்திருக்கின்ற திமுகவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை, உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுங்கள்’ - ஸ்டாலின்