இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கரன்கோவில் (தனி) தொகுதி வேட்பாளராக ரா.அண்ணாதுரை (தென்காசி வடக்கு மாவட்டம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் மனாவா சாம் ஷாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஏ. சீமா (கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம்தமிழர் கட்சி வேட்பாளர்