சென்னை: நீலாங்கரையில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள் 24 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நாங்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி ஒரு நாளைக்கு 12 பேர் மட்டும் வரவேண்டும் என்று மேலதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், இந்த புதிய மாற்றம் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ஊழியர் ஒருவருக்கு மாதம் ரூ.4,500 மட்டுமே கிடைக்கும்.
எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவர். அதுமட்டுமல்லாமல், உணவு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும். இந்த நடவடிக்கை அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளாத சந்தேகம் எழுகிறது" என்றனர்.
இதையும் படிங்க: சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகும் "அம்மா உணவகம்"