சென்னை: அம்பத்தூர்- வானகரம் சாலையில் சிறிய, பெரிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இங்குள்ள ஒரு கம்பெனிக்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் (52) என்பவர் லாரியில் மூலப்பொருள்களை ஏற்றி கொண்டு வந்தார்.
பின்னர், அவர் அங்குள்ள கம்பெனியில் பொருள்களை இறங்கி விட்டு, லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டுத் தூங்கியுள்ளார். நள்ளிரவு 1மணியளவில் லாரியில் முன் பகுதியில் திடீரென கறும்புகை வெளியேறியது. இதனையடுத்து லாரியில் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது.
சத்தம் கேட்டு அருகில் படுத்துத் தூங்கிய ஓட்டுநர் முருகன் எழுந்து ஓடி வந்தார். பின்னர் அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயை அணைக்க ஒரு மணி நேரம் போராட்டம்
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீச்சி அடித்து லாரியில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி லாரியில் பற்றிய தீயை முழுவதுமாக அணைத்தனர்.
இதில் லாரியின் முன்பக்க முழுவதும் எரிந்து சேதமானது. புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆய்வாளர் மல்லிகா தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக லாரியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் காவலர் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க:பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்கள்: பட்டியல் வெளியிட்ட போக்குவரத்துத் துறை