கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் சிறிய கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன. ஒரு சில மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையிலுள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றிற்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்கு எந்தவித நேரக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உணவகங்கள், மளிகைக் கடைகளுக்கு பொருள்களை எடுத்துச் செல்ல நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு குறைக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.