நடிகர் அஜித்தின் மனிதநேயம், இரக்க குணம் அனைவரும் அறிந்ததே. தான் செய்யும் உதவி வெளியில் தெரியக்கூடாது என்றும் நினைப்பவர். ஆனால், அதையும் மீறி அவர் செய்த உதவிகள் வெளியில் தெரிந்துவிடுவதும் உண்டு. அப்படி ஒரு செய்திதான், இப்போது கோலிவுட்டில் பேசுபொருளாகி உள்ளது.
அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது வடமாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, அஜித் அங்கு சாலை ஓரத்தில் இருந்த இட்லி கடையில் உணவு சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்களிடம் மிகவும் சகஜமாக பேசியுள்ளார். அந்த இட்லி கடைக்காரரின் குடும்பம் குறித்து தெரிந்துகொண்ட அஜித் அவருடைய குழந்தைகளின் படிப்பிற்காக ஒரு லட்ச ரூபாய் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று அஜித் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வருகின்றன.
இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் காவல் துறையினரை திட்டிய அஜித் ரசிகர் கைது