சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள் இன்றிலிருந்து இயக்கப்படுகின்றன. இதனை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். குறிப்பாக, அகில இந்திய மோட்டார் வாகன தரக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
'என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்' -நிர்பயா குற்றவாளி உருக்கம்
நவீன முறையில் தரமாக உருவாக்கப்பட்டுள்ள இப்பேருந்துகளில் 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும், 20 பேர் நின்ற நிலையிலும் பயணம் செய்ய முடியும். இப்பேருந்தின் உத்தேச மதிப்பு 36 லட்சம் ரூபாயாகும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 48 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றிலிருந்து பயணிகள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டுவருகிறது. இப்பேருந்துகளில் குறைந்த கட்டணமாக 15 ரூபாயும், அதிகப்படியாக 40 கிமீ தொலைவிற்கு 60 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் இணைய முடக்கம் முடிவுக்கு வருமா?
புதிய குளிர்சாதனப் பேருந்துகளின் வழித்தடங்கள் கீழ்வருமாறு:
- சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர்
- தாம்பரம் - திருவான்மியூர்
- திருநகர் - சிறுசேரி
- பிராட்வே - கேளம்பாக்கம்
- கோயம்பேடு - வண்டலூர்
உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகிறது என மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.