நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் தயாரித்த உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான "ஏா்பஸ் பெலுகா" விமானம், முதல்முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதன் சிறப்பம்சங்களை காணலாம்,
இந்த "பெலுகா" (A300-608ST) விமானம் சூப்பர் டிரான்ஸ்போர்ட்டராக பயன்படுகிறது.
உலகின் பெரிய சரக்கு விமானமாக இந்த பெலுகா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெலுகா விமானமானது திமிங்கலம் வடிவில் வடிவமைக்கபட்டுள்ளது.
"பெலுகா" எனும் இந்த சரக்கு விமானத்தை, 1995 ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்த பெலுகா விமானம் 186 அடி நீலமும், 56 அடி உயரமும் கொண்டதாகும்.
பெலுகா விமானத்தில் ஒரே நேரத்தில் 47,000 கிலோ எடையிலான சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும்.
இந்த வகை பெரிய சரக்கு விமானம், சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை.
எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை வந்த இந்த விமானம், எரிபொருள் நிரப்பியதும் தாய்லாந்து தலைநகர் பட்டாயாவிற்கு புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: திமிங்கலம் வடிவிலான "ஏா்பஸ் பெலுகா" விமானம் சென்னை வருகை!