ETV Bharat / city

அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை

அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வை தள்ளிவைக்க AIPCEU ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

author img

By

Published : Dec 7, 2021, 10:56 AM IST

தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை
தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நாளை 08 டிசம்பர் துவங்கி 12 டிசம்பர் வரை அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் (govt polytechnic lecturers) தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB: Teachers Recruitment Board) நடத்துகிறது. இதில் 1.38 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்தவருக்கு கணினி வழி தேர்வு (computer based test) நடக்கிறது. முறைகேடுகளை தடுப்பதாக சொல்லி, விண்ணப்பம் செய்தவர்களுக்கு 150 கி.மீ முதல் 200 கி.மீ வரை, வேறு மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கி admit card விநியோகித்துள்ளது TRB வாரியம்.

சமீபத்தில் (01/12/2021 அன்று) தமிழக மனித வள மேலாண்மைத் துறை அரசாணை என் 133 மூலம்: அனைத்து தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் 'தமிழ் மொழித்தாள் தகுதித் தேர்வைக்' கட்டாயமாக்க அரசு ஆணையிட்டுள்ளது. அரசாணைக்கு பின் இத்தேர்வு நடக்க இருந்தாலும், அரசின் 'தமிழ் மொழி தகுதித் தேர்வை' புறக்கணித்து தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் இதில் பல வெளி மாநிலத்தவர் விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்று நம்பப்படுகிறது. நாமக்கல் மற்றும் வேலூரில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். ஒமைக்கிறான் அச்சுறுத்தல் காரணமாக அரசு, மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை இத்தேர்வை எழுத வரும் வெளிமாநிலத்தவர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதேபோல கனமழை மற்றும் வெள்ள பதிப்புகளில் சிக்கி தவிக்கும் தமிழ் மாநில தேர்வர்களுக்கு இத்தேர்வை இத்தருணத்தில் அணுகுவதில் சிக்கல் இருக்கிறது. உதாரணத்திற்கு நேற்று முன் தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 274 மி.மீ மழை பெய்து வெள்ளக்காடாக உள்ளது.

மேலும் தேர்வு மையங்களாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள. புதன், வியாழன், வெள்ளி, சனி, என்ற பள்ளி கல்லூரி நாட்களில் நடக்கவிருக்கும் இத்தேர்வு மாணவர்களுக்கு பெருந்தொற்று அபாயத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.

எனவ இத்தேர்வை உடனடியாக தள்ளி வைத்து, முறைப்படி அரசாணையை பின்பற்றி, பெருந்தொற்று வழிமுறைகளை பின்பற்றி, மழைக்காலம் முடிந்த பிறகு பாதுகாப்பாக நடத்த உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாற்றுச் சான்றிதழ் அரசாணை விவகாரம்: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.