சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உறுப்பினர் செயலாளர் ராஜீவ்குமார் அனுப்பியுள்ள உத்தரவில், "மேலாண்மைப் படிப்புகளில் முதுகலை டிப்ளமோ பாடப் பிரிவுகளை நடத்தும் கல்வி நிலையங்கள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதியை பெற வேண்டும்.
முன் அனுமதி பெற்ற பிறகே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உரிய அனுமதியை பெறாமல் மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்வி நிலையங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: காப்பாற்ற கதறும் திருச்சி மாணவர்கள்!