ETV Bharat / city

ப.ரவீந்திரநாத் எம்.பி.க்கு அதிமுக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்; ஈபிஎஸ் கடிதம் - ஓபிஎஸ்

ஓபிஎஸ் மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி.க்கு அதிமுக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஈபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ப.ரவீந்திரநாத் எம்பிக்கு அதிமுக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்; ஈபிஎஸ் கடிதம்

author img

By

Published : Jul 21, 2022, 7:21 PM IST

சென்னை: அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து ஓபிஎஸ் தரப்பினரை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈபிஎஸ் ஈடுபட்டுள்ளார்.

அந்த வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி-யை கட்சியில் இருந்து நீக்கினார். இப்பொழுது ப.ரவீந்திரநாத் எம்.பிக்கு அதிமுக அந்தஸ்தை நீக்கி, அவர் தன்னிச்சையான எம்.பியாக அறிவிக்க வேண்டும் என ஈபிஎஸ் மக்களவை சபாநாயருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பாக, தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்ற ஒரே எம்.பி ப.ரவீந்திரநாத் ஆவார். ப.ரவீந்திரநாத் தேனி மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஈபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ்சின் எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றம் செய்து ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருக்கு மனு அளித்துள்ளார். ஓபிஎஸ் தரப்பினரை முழுமையாக கட்சியில் இருந்து அகற்றுவதற்கான வேலைகளில் ஈபிஎஸ் தரப்பினர் இறங்கியுள்ளனர்.

பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கி திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டார். வங்கிகள் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக ஏற்றுக் கொண்டது. ஓபிஎஸ்சின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை சட்டப்பேரவை சபாநாயகரும், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் பதவியை மக்களவை சபாநாயகர் தான் முடிவு செய்வார்கள்.

இறுதியாக தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கின்றதோ அதன் அடிப்படை தான் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்தில் சீல் அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.