சென்னை: டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக, அமமுக கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அதிமுக, அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த மாறன் என்பவர் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அமமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசியதாக திருவல்லிக்கேணி லாக் நகரைச் சேர்ந்த மாரி (38) என்பவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாரி அமமுக 114ஆவது வார்டு பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இபிஸ் வாகனம் மீது காலணி வீச்சு: அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்