ETV Bharat / city

அதிமுக பொதுக்குழு 2.O: ஓபிஎஸை நீக்கிய ஈபிஎஸ் - ஈபிஎஸை நீக்கிய ஓபிஎஸ் - Greenways Road

AIADMK GENERAL COUNCIL MEETING LIVE UPDATES

author img

By

Published : Jul 11, 2022, 7:58 AM IST

Updated : Jul 11, 2022, 1:01 PM IST

12:42 July 11

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்

145 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைப்பதற்கான நோட்டீசை அளித்துள்ளனர். அடுத்த கட்டமாக, 146 குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, தலைமை அலுவலகத்தை சீல் வைக்க உள்ளனர். மாநகர காவல் சட்டம் 41 பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

12:29 July 11

தலைமை அலுவலகப் பகுதியில் 144

சென்னை அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க உள்ளனர். மேலும், அங்கு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

12:26 July 11

'ஓபிஎஸ் எதை விட்டு கொடுத்தார்' - ஈபிஎஸ்

"ஓபிஎஸ் எதை விட்டுக் கொடுத்தார். நாங்கள் தான் அவருக்கு விட்டு கொடுதோம். திமுகவோடு இணைந்து கொண்டு கட்சியை அழிக்க நினைத்தவர், ஓபிஎஸ். ஒரு கட்சியின் தலைவரே திமுகவோடு தொடர்பு வைத்திருந்தால் அந்த கட்சி எப்படி ஆட்சிக்கு வர முடியும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

12:19 July 11

ஓபிஎஸ் நீக்கம்

ஓ. பன்னீர்செல்வம், ஜெ.சி.டி.பிரபாகர், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ்பாண்டியன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

12:00 July 11

"ஈபிஎஸ்ஸை நான் நீக்குகிறேன்" - ஓபிஎஸ்

கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்படாமல் என்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு ஒருங்கிணைப்பாளராகிய நான், ஈபிஎஸ், கே.பி. முனுசாமி கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்குகிறேன் என ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

11:45 July 11

ஓபிஎஸ் உள்பட பலர் நீக்கம்

ஓ. பன்னீர்செல்வம், ஜெ.சி.டி.பிரபாகர், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ்பாண்டியன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

11:40 July 11

ஓபிஎஸ் நீக்கம் - சிறப்பு தீர்மானம் தாக்கல்

ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் மற்றும் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளும் எதிராக செயல்பட்ட பன்னீர்செல்வத்திற்கு கண்டனம் தெரிவித்து நத்தம் விஸ்வநாதன் சிறப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

11:37 July 11

'திமுகவோடு சேர்ந்து அழிவார்கள்' - கே.பி.முனிசாமி

திமுகவோடு சேர்ந்து நமது இயக்கத்தை எதிர்பவர்கள் நிச்சயம் அழிவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனிசாமி தெரிவித்துள்ளார்.

11:20 July 11

'அதிமுக ரத்தம் உங்கள் உடம்பில் ஓடுகிறதா?'

"பொதுக்குழு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஓபிஎஸ் தலைமை கழகம் சென்றுள்ளார். உண்மையான அதிமுக ரத்தம் உங்கள் உடம்பில் ஓடுகிறதா?" என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

11:13 July 11

இனி ஓபிஎஸ்-க்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் இரண்டே வாய்ப்புகள் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமுமே ஆகும்.

11:08 July 11

ஓபிஎஸ் நீக்கம்?: 'ஈபிஎஸ் பரிசீலிப்பார்' - கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பரிசீலனை செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

11:00 July 11

பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம்

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கக்கூறி பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

10:56 July 11

காவல் துறை - வருவாய் துறை ஆலோசனை

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் இணை ஆணையர் பிரபாகரன் ஆகியோர் வருவாய் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

10:54 July 11

கலவரத்தில் போலீஸாருக்கும் காயம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில், 11 அதிமுகவினர் மற்றும் 2 போலீசார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். காவலர்கள் பாலகிருஷ்ணன், மனோஜ் குமார் ஆகியோர் உள்பட 13 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

10:43 July 11

எடப்பாடி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது - தங்கமணி

முன்னாள் அமைச்சர் தங்கமணி, "எடப்பாடி தலைமையிலான எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது. 2023 மக்களவை தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றி அந்த எக்ஸ்பிரஸ் டெல்லி செங்கோட்டை சென்றடையும். வரும் 2024இல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை அடையும்" என தெரிவித்துள்ளார்.

10:40 July 11

காட்டிக்கொடுப்பவர்கள் கட்சிக்கு தேவையா...? - தங்கமணி

பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி,"திமுகவை வலிமையோடு எதிர்க்ககூடிய வல்லமை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் கொடுத்த அனைத்து தடைகளையும் பொறுமையாக எதிர்கொண்டிருக்கிறார். காட்டிக்கொடுப்பவர்கள் கட்சிக்கு தேவையா?" என தெரிவித்துள்ளார்.

10:34 July 11

வரவு செலவு கணக்கை வாசிக்கும் சி.விஜயபாஸ்கர்

அதிமுகவின் வரவு, செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாசிக்கிறார்.

10:32 July 11

ஓபிஎஸ் மீது புகார்

அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டது என புகார்.

10:31 July 11

தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்...

ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தை வைத்து அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை அடித்து உடைத்து கீழே போட்டு மிதித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.

10:04 July 11

4 மாதத்தில் உட்கட்சி தேர்தல்

நான்கு மாதத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தேர்தல் அதிகாரியாக பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

09:50 July 11

16 தீர்மானங்கள் என்னென்ன?

  • அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.
  • தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்..
  • அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.
  • அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.
  • அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்.
  • அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது.
  • அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.
  • மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும் , எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அதிமுக அரசின் வரலாற்று வெற்றிகளும்.
  • அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்.
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்.
  • சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
  • மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியிறுத்தல்.
  • இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
  • அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்.
  • நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.

09:31 July 11

16 தீர்மானங்களுக்கு செயற்குழு ஒப்புதல்

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது செயற்குழு நிறைவடைந்துள்ளது. செயற்குழுவில் 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கும் சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

09:26 July 11

தொடங்கியது செயற்குழு...

நீதிமன்றம் அனுமதி உத்தரவை தொடர்ந்து வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் 2,400க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், 250 செயற்குழு உறுப்பினர்களும் பொதுக்குழுவில் கலந்துகொண்டுள்ளனர்.

09:21 July 11

இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிறார் ஈபிஎஸ்?

சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

09:09 July 11

நோட்டீஸ் தேவையில்லை

பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதால், 15 நாட்கள் நோட்டீஸ் வழங்க வேண்டும் என அவசியம் இல்லை என்ற நீதிபதி

09:07 July 11

தலைமை அலுவலகத்தில் புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்...

அதிமுக தலைமை அலுவலகத்தில் பூட்டி இருந்த கதவை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

09:01 July 11

பொதுக்குழுவிற்கு அனுமதி

அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதே அனைத்து உறுப்பினர்களின் விருப்பமாக உள்ளது என்பதால் பொதுக்குழுவை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவு பிறப்பித்தார்.

08:58 July 11

வானகரம் வந்தார் ஈபிஎஸ்...

வானகரம் வந்தார் ஈபிஎஸ்...
வானகரம் வந்தார் ஈபிஎஸ்...

பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்திற்கு ஈபிஎஸ் வருகை தந்தார்.

08:29 July 11

தலைமை அலுவலகத்தில் தகராறு...

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

08:28 July 11

தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒரு உதவி ஆணையர், இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

08:26 July 11

தலைமை அலுவலகம் வருகிறார் ஓபிஎஸ்?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, ஓபிஎஸ் ஆனது ஆதரவாளர்களுடன் வர உள்ள நிலையில், அலுவலகம் முன்பாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

08:00 July 11

தீர்ப்புக்கு காத்திருக்கும் ஓபிஎஸ்...

பொதுக்குழுவை ரத்து செய்வது குறித்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணியளவில் வழங்கப்பட்ட பிறகே, ஓபிஎஸ் புறப்படுவார் என தகவல் கூறப்படுகிறது.

07:58 July 11

விரைவாக புறப்பட்ட ஈபிஎஸ்...

பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு, பசுமைவழிச்சாலை வீட்டிலீருந்து எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார வாகனத்தில் காலை 6.45 மணியளவில் புறப்பட்டார்.

07:30 July 11

ஈபிஎஸ் வருகைக்கு காத்திருக்கும் அதிமுகவினர்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற உள்ள நிலையில், வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டப வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அந்த தீர்ப்புக்கு பின்னர்தான் பொதுக்குழு நடைபெறுமா, நடைபெறாதா என்ற கேள்விக்கு விடைத்தெரியும் என்பதால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு முகாம்களிலும் தற்போது பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Last Updated : Jul 11, 2022, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.