ETV Bharat / city

மக்கள் கண்ணீருக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும்... ஓ. பன்னீர்செல்வம்...

இரட்டை வேடம்போடும் திமுக ஆட்சியில் மக்கள் கண்ணீர்விட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
author img

By

Published : Apr 5, 2022, 1:16 PM IST

சென்னை: சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. சொத்து வரி உயர்த்தப்படாது என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது உயர்த்தி மக்களை ஏமாற்றிவிட்டது.

கரோனாவின் தாக்கம் முடிந்து பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய நேரத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே வேதனையாக பார்க்கப்படுகிறது. திமுக சுயநலம், கபடநாடகம், இரட்டை வேடம் போன்ற செயலை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு மக்கள் கண்ணீர்விட்டு கொண்டிருக்கின்றனர். மக்களின் கண்ணீருக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக கட்டுமான, அத்திவாசிய பொருள்களின் விலை உயர்வு மக்களை நேரடியாக, கடுமையாக பாதித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சொத்து வரி உயர்த்தியது ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் செயல். மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை வரும். இதனை எதிர்த்து அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும். குறிப்பாக மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன" என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர் தான்.. மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன - ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.