ETV Bharat / city

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு -குற்றவாளிகளின் வழக்கறிஞர் பதிவு சஸ்பென்ட்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பி.வில்லியம், பி.எம்.பாசில் உள்ளிட்ட மூவரின் வழக்கறிஞர் பதிவை சஸ்பென்ட் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

பார் கவுன்சில்
பார் கவுன்சில்
author img

By

Published : Oct 29, 2021, 3:36 PM IST

கன்னியாகுமரி: நரம்பியல் துறை பிரபல மருத்துவர் சுப்பையாவுக்கும், பொன்னுச்சாமி என்பவருக்கும் இடையே 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலப்பிரச்சினை காரணமாக 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டப்பகலில் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒன்பது பேரில் வில்லியம், பாசில் ஆகியோர் வழக்கறிஞராக தொழில்புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி. ராஜ்குமார் வெளியிட்டு அறிவிப்பில், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட வில்லியம், பாசில் ஆகியோரின் வழக்கறிஞர் பதவி இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சுப்பையா
மருத்துவர் சுப்பையா

இதேபோல சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் ஆர். நடேஷ்குமார் தொழில்புரிய தடைவிதித்தும் பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'வேலையில்லா பட்டதாரி' பட வழக்கு - புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.