சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன், போக்குவரத்து தலைவர் அலுவலக சிறப்பு அலுவலர் ஜோசப் டயஸ், தலைமை நிதி அலுவலர், பொது மேலாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : குடிநீர் வசதி கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்