ETV Bharat / city

வாக்கு எண்ணிக்கை: இந்திய, தமிழ்நாடு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் - சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் தமிழ்நாடு தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

advisory meeting by election officials
ந்திய, தமிழ்நாடு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
author img

By

Published : Apr 17, 2021, 8:27 AM IST

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் அலுவலர்களுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் பதிவான வாக்கு இயந்திரப் பெட்டிகளை மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

வரும் மே 2ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் இந்தக் காணொலிக் காட்சியில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பாக பிகார் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஹெச்.ஆர். சீனிவாசா, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மதுசுதன் குப்தா, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர் விப்பின் கட்டார் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாகத் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வேளச்சேரியில் நாளை மறு வாக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.