இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா. வளர்மதி (கழகச் செய்தித் தொடர்பாளர்) அவர் வகிக்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மகளிர் அணிச் செயலாளராக இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
அதேபோல், கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து வைகைச்செல்வன் (கழக செய்தித் தொடர்புச் செயலாளர்) விடுவிக்கப்பட்டு இன்றுமுதல் இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
மேலும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக உள்ள மரகதம் குமரவேல் மகளிர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கழக வர்த்தக அணிச் செயலாளராக வி.என்.பி. வெங்கட்ராமனும், இணைச் செயலாளராக ஏ.எம். ஆனந்தராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/5iTuAjuf3l
— AIADMK (@AIADMKOfficial) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/5iTuAjuf3l
— AIADMK (@AIADMKOfficial) July 23, 2021கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/5iTuAjuf3l
— AIADMK (@AIADMKOfficial) July 23, 2021
இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரை: முகமது அலிக்கு ஒரு காதல் கடிதம்