ETV Bharat / city

மீண்டும் தலைதூக்கும் அதிமுகவின் இரட்டைத் தலைமை விவகாரம்! - palaniswami

முத்தலாக் பிரச்னை மூலம் அதிமுகவில் அடங்கியிருந்த இரட்டை தலைமை பிரச்னை தற்போது தலை தூக்கத் தொடங்கி உள்ளது.

மோடி-ஓபிஎஸ்-ஈபிஎஸ்
author img

By

Published : Jul 27, 2019, 10:49 PM IST

Updated : Jul 27, 2019, 11:25 PM IST

மூன்று முறை 'தலாக்' என்ற சொல்லை உச்சரிப்பதன் மூலம் முஸ்லீம் ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்ய வழி வகுக்கும் முத்தலாக் முறை குறித்து சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் சமீப காலமாக உலாவி வருகின்றன. முத்தலாக்கிற்கு எதிரான பெண்களின் போராட்டம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் அரசியல் தளங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்த மசோதாவை ஆரம்பம் முதலே எதிர்த்தே வந்தார். அவர் மறைவிற்குப் பிறகும் நாடாளுமன்றத்தில் அதிமுக தனது எதிர்ப்பை பதிவு செய்துவந்தது. ஆனால், தற்போது அதிமுகவின் இரட்டைத் தலைமை பிரச்னையால் முத்தலாக் விவாகரத்து நடைமுறை சட்டவிரோதம் என கூறும் (திருமணம் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 அதிமுக ஆதரவுடன் நேற்று நிறைவேறியது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுகவில் பல்வேறு களேபரங்கள் நாள்தோறும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒன்றுபட்ட அதிமுக அணி அணியாகப் பிரிந்து துண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் நம்பிக்கை மையமாக இருந்த ஓ. பன்னீர்செல்வம் ஜெ. நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தினார். அன்று முதல் தற்போது வரை அதிமுகவில் தலைமை பிரச்னை தலையாய பிரச்னையாக உள்ளது.

சசிகலா-ஓபிஎஸ்-ஈபிஎஸ்
சசிகலா-ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சர் பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருகின்றனர். ஆனால், இருவருக்குள் யார் பெரியவர், யாரின் கீழ் கட்சி இருக்கிறது என்று பல நேரங்களில் மறைமுக பிரச்னை எழுவது உண்டு. தமிழ்நாடு முதலமைச்சராக பழனிசாமி இருப்பதால் பல்வேறு விஷயங்களில் அவரே முன்னிலைப்படுத்தப்பட்டு பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டார்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ்-தினகரன்
ஓபிஎஸ்-ஈபிஎஸ்-தினகரன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றதன் மூலம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பியானார். இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றியாளர்கள் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, என தனித்தனியாக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றுவந்தனர். ரவீந்திரநாத்தை அமைச்சர் ஆக்கினால் தனது பலம் டெல்லியில் ஓங்கும் என்று பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வந்தார். ஆனால், தனக்கு வேண்டப்பட்ட சீனியர் வைத்திலிங்கம் மூலம் பன்னீர்செல்வத்தின் ராஜதந்திரத்தைத் தவிடு பொடி ஆக்கினார் பழனிசாமி. இப்படியாக ஈகோ பிரச்னையால் மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் பறிபோனது.

இரட்டைக் குழல் துப்பாக்கி என்று தங்களைக் கூறி வந்தாலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவேறு துருவங்களாகவே செயல்பட்டுவந்தனர். சில இடங்களில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவதும், சில இடங்களில் ஈபிஎஸ் புறக்கணிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கட்சியில் இரட்டைத் தலைமை இருப்பதால் முடிவெடுக்க முடியவில்லை, ஒற்றைத் தலைமை வேண்டும் என உட்கட்சி பூசலை வெட்டவெளிச்சமாக்கினார்.

ஆளுநர்
ஆளுநர்

அவரது கருத்துக்குக் குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவித்தார். அதுவரை புகைந்து கொண்டிருந்த இரட்டைத் தலைமை பிரச்னை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தற்போது அந்த பிரச்னை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்துவிட்டு வந்தார். பாஜக அரசு 2ஆவது முறையாகப் பதவி ஏற்றது முதல் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தனித்தனியேதான் டெல்லி சென்றுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தனக்கு மீண்டும் சீட் வழங்காததால் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என இரட்டை தலைமை பிரச்னையைக் கிளறிவிட்டுச் சென்றுள்ளார்.

மைத்ரேயன்
மைத்ரேயன்

இந்நிலையில், நேற்று மக்களவையில் முத்தலாக் மசோதாவில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மசோதா நிறைவேறியது. இதுநாள் வரை முத்தலாக் மசோதாவை எதிர்த்துவந்த அதிமுக நேற்று ஆதரவு அளித்தது. முத்தலாக் மசோதாவை அன்வர் ராஜா உள்ளிட்ட அதிமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் தற்போது மக்களவையில் அதிமுக சார்பில் இருக்கும் ரவீந்திரநாத் முத்தலாக் மசோதாவை ஆதரிப்பதாக கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ”நான் இது தொடர்பாக கருத்துக் கூற விரும்பவில்லை. மாநிலங்களவைக்கு இந்த விவகாரம் வரும்போது கடுமையாக எதிர்ப்போம்” என்றார். மேலும் வேலூர் தேர்தல் பரப்புரை நடக்கையில், முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்து இருப்பது முஸ்லிம்கள் அதிகம் வாழும் வேலூர் பகுதியில் எதிரொலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Intro:Body:முத்தலாக் பிரச்சினை மூலம் அதிமுகவில் அடங்கி இருந்த இரட்டை தலைமை பிரச்சினை தற்போது தலை தூக்க தொடங்கி உள்ளது. மேலும் இந்த விவகாரம் வேலூர் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. 

மூன்று முறை 'தலாக்' என்ற சொல்லை உச்சரிப்பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்ய வழி வகுக்கும் முத்தலாக் முறை, கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உலாகி வந்தது. இதன் தாக்கம், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலும், உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரிடையேயும் எதிரொலித்தது. முத்தலாக்கிற்கு எதிரான பெண்களின் போராட்டம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் அரசியல் தளங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்த மசோதாவை ஆரம்பம் முதல் எதித்தார். அவருக்கு பிறகு நாடாளுமன்றத்தில் அதிமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. ஆனால் தற்போது அதிமுக இரட்டை தலைமை பிரச்சினையால் முத்தலாக் விவாகரத்து நடைமுறையை சட்டவிரோதமாக்கும் (திருமணம் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 அதிமுக ஆதரவுடன் நேற்று நிறைவேறியது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைத்த பிறகு அதிமுகவில் பல்வேறு களேபரங்கள் நாள்தோறும் நடந்தது. ஒன்று பட்ட அதிமுக அணிஅணியாக பிரிந்து துண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் நம்பிக்கை மையமாக இருந்த ஓ. பன்னீர்செல்வம் ஜெ. நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தினார். அன்று முதல் தற்போது வரை அதிமுகவில் தலைமை பிரச்சினை தலையாய பிரச்சினையாக உள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றனர். ஆனால இருவருக்குள் யார் பெரியவர், யாரது கீழ் அதிமுக இருக்கிறது என்று பல நேரங்களில் மறைமுக பிரச்சினை எழுவது உண்டு. தமிழக முதல்வராக பழனிசாமி இருப்பதால் பல்வேறு விஷயங்களில் அவரே முன்னிலையில் படுத்தப்பட்டு பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியானார். இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அதிமுக வெற்றியாளர்கள்  ஓபிஎஸ் டீம், இபிஎஸ் டீம் என தனித்தனியாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று வந்தனர். ரவீந்திரநாத்தை மந்திரி ஆக்கினால் தனது பலம் டெல்லியில் ஓங்கும் என்று பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வந்தார். தனக்கு வேண்டப்பட்ட சீனியர் வைத்திலிங்கம் மூலம் பன்னீர்செல்வத்தின் ராஜதந்திரத்தை தவிடு பொடி ஆக்கினார் பழனிசாமி. இப்படியாக ஈகோ பிரச்சினையால் மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் பறிபோனது. இரட்டை குழல் துப்பாக்கி என்று தங்களை கூறி வந்த இபிஎஸ், ஓபிஎஸ் இருவேறு துருவங்களாகவே செயல்பட்டு வந்தனர். சில இடங்களில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவதும், சில  இடங்களில் இபிஎஸ் புறக்கணிக்கப்படுவதும்  தொடர்கதையாக வந்தது. 

மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கட்சியில் இரட்டை தலைமை இருப்பதால் முடிவெடுக்க முடியவில்லை, ஒற்றை தலைமை வேண்டும் என உள்கட்சி பூசலை வெட்டவெளிச்சமாக்கினார். அவரது கருத்துக்கு குன்னம் எம் எல் ஏ ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவித்தார். அதுவரை புகைந்து கொண்டிருந்த இரட்டை தலைமை பிரச்சினை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அதையடுத்து நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பிறகு இரட்டை தலைமை கோரிக்கை பூஸ்ஸ்ஸ்ஸ்..... ஆனது. தற்போது அந்த பிரச்சினை மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.  பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மட்டும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து விட்டு வந்தார். பாஜக அரசு 2 வது முறையாக  பதவி ஏற்றது முதல் ஓ பி எஸ், இபிஎஸ் தனித்தனியே தான் டெல்லி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் எம் பி மைத்ரேயன் தனக்கு மீண்டும் சீட் வழங்காததால் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒற்றைத்தலைமை இருக்க வேண்டும் என இரட்டை தலைமை பிரச்சினையை கிளறி விட்டு சென்றுள்ளார். நேற்று மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்புக்காக விடப்பட்டது. அதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மசோதா நிறைவேறியது. இதுநாள் வரை முத்தலாக் மசோதாவை எதிர்த்து வந்த அதிமுக நேற்று ஆதரவு அளித்தது. முத்தலாக் மசோதாவை அன்வர் ராஜா உள்ளிட்ட அதிமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் தற்போது மக்களவையில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டுமே உள்ளார். முத்தலாக் மசோதாவை ஆதரிப்பதாக நேற்று கூறினார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார்  பேசுகையில், கருத்து கூற விரும்பவில்லை. மாநிலங்களவைக்கு இந்த விவகாரம் வரும்போது கடுமையாக எதிர்ப்போம் என்று கூறினார். மேலும் வேலூர் தேர்தல் பிரச்சாரம் நடக்கையில், முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்து இருப்பது முஸ்லிம்கள் அதிகம் வாழும் வேலூர் பகுதியில் இது எதிரொலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

Conclusion:
Last Updated : Jul 27, 2019, 11:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.