ETV Bharat / city

அண்ணாவின் 52 ஆவது நினைவு நாள்: சென்னையில் முதலைமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி செலுத்துகிறார்கள்!

பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளான பிப்., 2ஆம் தேதி புதன்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அண்ணாவின் 52 ஆவது நினைவு நாள்:
அண்ணாவின் 52 ஆவது நினைவு நாள்:
author img

By

Published : Jan 28, 2021, 9:51 PM IST

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாள் பிப்., 3ஆம் தேதி வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பிப்., 3ஆம் தேதி புதன்கிழமை பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்தநிகழ்வில் அதிமுகவின் முன்னாள், இன்னாள் மக்களைவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்வேறு நிலையில் பொறுப்பில் இருக்கும் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், பொதுமக்கள் அரசு அறிவித்திருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கலந்து கொள்ள வேண்டும்.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

தமிழ்நாடு, கழக அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பிப்.3ஆம் தேதி அண்ணாவின் உருவச்சிலை அல்லது படத்திற்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெரினாவில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.