ETV Bharat / city

"வெற்றி வாய்ப்பு குறித்து என்னிடம் கேட்காதீர்கள் ஸ்டாலினிடம் கேளுங்கள்"- ஆதி ராஜாராம் - முக ஸ்டாலின்

வெற்றி வாய்ப்பு குறித்து என்னிடம் கேட்காதீர்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று ஸ்டாலினிடம் கேளுங்கள் என கொளத்தூர் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் அதிமுக, கொளத்தூர் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம், கொளத்தூர் தொகுதி, ஆதிராஜாராம், Chennai Kolathur constituency, Chennai, Kolathur, Aadhirajaram, MK Stalin, முக ஸ்டாலின், ADMK Kolathur Candidate Aadhirajaram
admk-kolathur-candidtae-aaadhirajaram-filed-nomination
author img

By

Published : Mar 17, 2021, 6:23 PM IST

Updated : Mar 17, 2021, 7:06 PM IST

சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் போட்டியிடுகிறார். இவர் இன்று (மார்ச் 17) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக வந்து சென்னை அயனாவரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதி ராஜாராம், "கொளத்தூர் தொகுதியில் மிக பிரகாசமான வெற்றியைப் பெறுவேன். பல இடங்களில் கழிவுநீர் வெளியேறியுள்ளது. அதை சரி செய்வேன். கோயில், குளங்கள் திமுகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஸ்டாலின் 10 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையும் சரி செய்வேன்.

கொளத்தூர் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வேட்புமனு தாக்கல்

முதலில் பொதுமக்களின் பிரச்னைகளை தீர்ப்பேன். வெற்றி வாய்ப்பு குறித்து என்னிடம் கேட்காதீர்கள், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று ஸ்டாலினிடம் கேளுங்கள். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்களுக்கு செய்ய தவறிய கடமைகளை நான் செய்வேன் என்ற நம்பிக்கையில் கொளத்தூர் தொகுதி மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம்? திமுகவா, அதிமுகவா?

Last Updated : Mar 17, 2021, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.