அதிமுக முதல் கட்டமாக 6 வேட்பாளரையும், இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்களையும் அறிவித்திருந்தது.
தற்போது 3ஆம் கட்டமாக, அதிமுக சார்பில் பெரம்பலூர் (தனி) தொகுதியில் இளம்பை தமிழ்செல்வனும், தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடைநம்பியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லால்குடி தொகுதியில் ஏற்கனவே அதிமுக வேட்பாளரை நிறுத்தியிருந்த நிலையில், தற்போது தமாகாவிற்கு லால்குடியை ஒதுக்கியுள்ளதால் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.
பாமகவின் 3ஆம் கட்டவேட்பாளர் பட்டியல்
பாமக தரப்பில் மேட்டூரில் சதாசிவம், பூந்தமல்லி(தனி) தொகுதியில் ராஜமன்னார், சங்கராபுரம் தொகுதியில் ராஜா, வந்தவாசி (தனி) தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 19 வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் மீதமுள்ள 4 வேட்பாளர்களை தற்போது அறிவித்துள்ளது.
பாமக போட்டியிடும் 23 தொகுதிகளில் மயிலாடுதுறை, விருதாச்சலம், சோளிங்கர் ஆகிய மூன்று தொகுதியில் காங்கிரஸ் உடனும், திருப்போரூரில் விசிக உடனும் மீதமுள்ள 19 தொகுதிகளில் திமுகவுடனும் நேரடியாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தலில் தனித்து நிற்கிறதா தேமுதிக?