சென்னை : இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் கூறுகையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேர்ப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 ஆயிரத்து 628 பள்ளிகளின், 1 லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு 86 ஆயிரத்து 326 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 56 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மீதமுள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான, 2ஆம் சுற்று விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக நவம்பர் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்று வரையில் சுமார் 1000 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் விபரங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு