ETV Bharat / city

வடக்கு மண்டல ஐஜியாக பெரியய்யாவிற்குக் கூடுதல் பொறுப்பு - Corona for IG sankar

தமிழ்நாடு காவல் துறை வடக்கு மண்டல ஐஜி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அப்பொறுப்பை கூடுதலாக ஐஜி பெரியய்யா கவனிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Additional responsibility for Periyaya as Northern Region IG, வடக்கு மண்டல ஐஜியாக பெரியய்யாவிற்கு கூடுதல் பொறுப்பு, ஐஜி பெரியய்யா, IG Periyaya, சென்னை, chennai, tamilnadu North region IG, Corona for IG sankar, Election Commission
additional-responsibility-for-periyaya-as-northern-region-ig
author img

By

Published : Mar 22, 2021, 4:15 PM IST

சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் வடக்கு மண்டல ஐஜி பொறுப்பில் இருந்தவர் சங்கர். இவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்திக் கொண்டு விடுப்பில் இருந்துவருகிறார்.

மிக முக்கியப் பொறுப்பான வடக்கு மண்டல ஐஜி பொறுப்பைத் தமிழ்நாடு காவல் துறை பொதுப்பிரிவு ஐஜியான பெரியய்யா கூடுதலாகக் கவனித்துக் கொள்வார் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகளின்படி ஆறு மாதத்திற்கு மேல் ஓய்வுபெறும் காலம் உள்ள அலுவலர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் ஐஜி பெரியய்யா அடுத்த மாதம் ஓய்வுபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அவருக்கு வடக்கு மண்டல ஐஜி பொறுப்பு வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 24ஆம் தேதி வரை சங்கர் விடுமுறையில் இருப்பார். அதன் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பிவிடுவார் என்பது காவல் துறை வட்டாரங்களின் தகவலாக இருக்கிறது.

மேலும் தென்மண்டல ஐஜியாக இருந்த முருகனை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்ததால் அவர், நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இதனால் தென் மண்டல ஐஜி பொறுப்பு காலியாக உள்ளதால் அந்தப் பொறுப்பை கூடுதலாக மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கவனிப்பார் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடு - சத்யபிரத சாகு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.