ETV Bharat / city

குடிபோதையில் தகராறு - நடிகை பாபிலோனாவின் சகோதரருக்கு சிறை - CASE FILED AGAINST BROTHER OF ACTRESS BABILONA

தேநீர் கடை உரிமையாளரைத் தாக்கியதோடு, குடிபோதையில் காவல் நிலையத்திலும் தகராறு செய்த நடிகை பாபிலோனாவின் சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 12, 2022, 9:30 AM IST

Updated : Oct 12, 2022, 9:38 AM IST

சென்னை: விருகம்பாக்கத்தைச்சேர்ந்த சேர்மதுரை(38) என்பவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (அக்.11) சேர்மதுரை கடையில் இருந்தபோது அங்கு ஜீப்பில் வந்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த விக்கி(எ)விக்னேஷ் குமார் பணம் கேட்டு, சேர்மதுரையுடன் தகராறில் ஈடுபட்டதோடு, பணம் தரமறுத்த அவரை தாக்கியதாகக்கூறப்படுகிறது.

பின்னர் அத்தோடு, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, கல்லாவில் இருந்த ரூ.1500 பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். இந்தச்சம்பவம் தொடர்பாக, சேர்மதுரை அளித்தப்புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விக்கியைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் இருந்த விக்கி(எ)விக்னேஷ் குமார் காவல் துறையினரை தரக்குறைவாகப் பேசி, காவல் நிலையத்திற்குள் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜீப்..

இதனைத்தொடர்ந்து, விக்கியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.100 பணம், 1 வீச்சு அரிவாள் மற்றும் ஜீப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். நடிகை பாபிலோனாவின் சகோதரரான இவர் விருகம்பாக்கம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனவும், அவர் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விக்கியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இந்தியக்கடல் பகுதியில் 2 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

Last Updated : Oct 12, 2022, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.