தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. முன்னனி நகைச்சுவை நடிகரான இவரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 22) ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வௌவால் கதாபாத்திரத்தில் பிரபலம்
இவரின் சுருண்ட தலை முடியும், படங்களில் கலாய்த்து பேசுவதுமே ரசிகர்களின் மனங்களில் நகைச்சுவை ஹீரோவாக திகழ்கிறார். மான் கராத்தே படத்தில் 'வௌவால்' கதாபாத்திரத்தில் நடித்த பின்னர் அதிகம் பிரபலமானார்.
ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், ரெமோ, தர்மபிரபு, மண்டேலா போன்ற திரைப்படங்களில் முக்கிய அங்கமாகவும், அக்கதாபாத்திரங்களின் நாயகனாகவும் திகழ்ந்து வருகிறார்.
HBD யோகி
இவர் 1985ஆம் ஆண்டில் ஜூலை 22ஆம் தேதி பிறந்தார். முதன்முதலில் தான் நடித்த 'யோகி' படத்தின் பெயரையே தன் பெயரில் இணைத்து யோகி பாபு என்று மாற்றிக்கொண்டார். 2020ஆம் ஆண்டில் திருத்தனி முருகன் கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை மணந்தார்.
என்றும் மக்களை மகிழ்வித்திருக்கும் யோகி பாபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: 'சார்பட்டா பரம்பரை' - வாக்கு தவறிய அமேசான்