சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த 'வீரதீர சூரன்' படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்தார். இந்த படத்திற்காக அவருக்கு வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் ஊதியத்துக்கு பதிலாக சிறுசேரியில் உள்ள நிலம் தருவதாக, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நிலமும் பணமும் வழங்கப்படவில்லை என்று நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையில் இன்று உயர் நீதிமன்றம், விசாரணையை சென்னை மத்திய குற்ற பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ். அலுவலர் விசாரணை நடத்த வேண்டும். இதனை கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அலுவலர் மேற்பார்வையிட வேண்டும். ஆறு மாதங்களுக்குள் முடித்து. அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன் ஜாமின் வழக்கை வாபஸ் பெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை