ETV Bharat / city

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு அபராதம்

author img

By

Published : Jul 24, 2020, 7:06 PM IST

Updated : Jul 24, 2020, 8:05 PM IST

சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றபோது சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth
Rajinikanth

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூலை 20ஆம் தேதி, மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து முகக்கவசத்துடன் லம்போர்கினி காரை ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது.

அதன் பின்னர், கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ரஜினிகாந்த் ஓய்வு எடுக்க சென்றது தெரியவந்தது. சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுந்தர்யா, அவரது கணவர் விசாகன், மகன் வேத் ஆகியோர் இருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் கேளம்பாக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் பெற்று சென்றாரா என்ற சர்ச்சை ஏற்கனவே நீடித்துவருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி இதேபோல கேளம்பாக்கம் சென்றபோது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதற்காக நடிகர் ரஜினிகாந்த்திற்கு 100 ரூபாயை தாழம்பூர் காவல் துறையினர் அபராதமாக விதித்துள்ளனர்.

Rajinikanth
சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு அபராதம்

ரஜினிகாந்த் தனது அபராதத் தொகையை கடந்த ஜூலை 26ஆம் தேதி செலுத்தியுள்ளார். அபராதம் செலுத்தியதற்கான ரசீது விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 24ஆம் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்றபோது காவல் துறையினர் அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: குடியாத்தம், திருவொற்றியூரில் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு தேர்தல்!

Last Updated : Jul 24, 2020, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.