சென்னை: தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச புத்தகப் பைகளில் அச்சிடப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த புகைப்படங்களை நீக்கவேண்டும் அல்லது அதன்மீது ஸ்டிக்கர் ஒட்டவேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
புகைப்படங்களை நீக்க ஆகும் 13 கோடி ரூபாயை அரசுப் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளுக்காக செலவிடுவேன் எனக்கூறி எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் அச்சிட்ட புத்தகப்பையையே விநியோகிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இது பலரின் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில், ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்ற தெலங்கு திரைப்பட நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
To Hon. CM @mkstalin garu, pic.twitter.com/iIo0YMD1vT
— Pawan Kalyan (@PawanKalyan) August 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To Hon. CM @mkstalin garu, pic.twitter.com/iIo0YMD1vT
— Pawan Kalyan (@PawanKalyan) August 31, 2021To Hon. CM @mkstalin garu, pic.twitter.com/iIo0YMD1vT
— Pawan Kalyan (@PawanKalyan) August 31, 2021
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் அரசியல் செய்யவேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.
உங்களது ஆட்சி நிர்வாகம், உங்களின் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Master Of All Students - முதலமைச்சருக்கு புகழாரம் சூடிய அன்பில்..!