ETV Bharat / city

காஞ்சிபுரம் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் மனு!

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின் போது காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

author img

By

Published : Aug 12, 2019, 12:35 AM IST

dgp

அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று கோவிலில் பக்தர்களின் வசதிகள் குறித்து ஆய்வு செய்யச் சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, விஐபி தரிசனம் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை ஒருமையில் திட்டியதுடன் அவரின் சட்டையை பிடித்து உலுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த சினி சரவணன் என்பவர் தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'ஆட்சியராக இருந்தாலும் பிற அலுவலர்களை ஒருமையில் பேசி அடிக்கப் பாய்வது தனி மனித ஒழுக்கத்திற்கு எதிரானதாகும், காவல் ஆய்வாளரை கடும் சொற்களால் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், இதுவே சாமானியர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அவர்கள் காவல்நிலைய பாத் ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக்கொண்டிருப்பார்கள் என சினி சரவணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 11.08.19

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின் போது காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசும் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டி.ஜி.பி.யிடம் புகார்..

காஞ்சிபுரம் அத்திவரதர் சுவாமி தரிசனத்தை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று கோவிலில் பக்தர்கள் வசதிகள் குறித்து ஆய்வு செய்யச் சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வி.ஐ.பி தரிசனம் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை ஒருமையில் திட்டியதுடன் அவரின் சட்டையை பிடித்து உலுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனை தொடர்ந்து, சென்னை நங்கநல்லூரை சேர்ந்த சினி சரவணன் என்பவர் தமிழக காவல்துறை தலைவருக்கு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார் அதில், ஆட்சியரக இருந்தாலும் பிற அதிகாரிகளை ஒருமையில் பேசி அடிக்கப் பாய்வது தனி மனித ஒழுக்கத்திற்கு எதிரானதாகும் எனதால், காவல் ஆய்வாளரை கடும் சொற்களால் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.. மேலும், இதுவே சாமானியர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருந்திருந்தால் அவர்கள் காவல்நிலைய பாத் ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதையும் சினி சரவணன் சுட்டிக்காட்டியுள்ளார்...

tn_che_05_social_activist_complaint_to_dgp_against_Kanchipuram_collector_script_7204894Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.