இதுகுறித்து பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எம் சாண்ட் (M Sand) எனப்படும் நொறுக்கப்பட்ட கல்மணல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தர சான்றிதழ்களை பொதுப்பணி துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப வல்லுநர் குழு அளித்துவருகிறது.
எம் சாண்டை தயாரிக்கும் நிறுவனங்களில் தாடை வடிவ நொறுக்கி, கூம்பு வடிவ நொறுக்கி, நேர்த்தண்டு தாக்கு விசை கருவி, சல்லடை பகுப்பாய்வுக்கான ஆய்வகம் போன்றவை முறையாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமின்றி, உற்பத்தியாகும் எம் சாண்ட் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆகியவற்றை குறைந்தது இரண்டு அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாடு பொதுப்பணித் துறையால் இதுவரை 216 எம் சாண்ட் நிறுவனங்களுக்கு தர சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தர சான்றிதழை 30 நாட்களுக்குள் பெற வேண்டும். இந்த விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அங்கீகாரம் இல்லாமல் எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்களும் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமிருந்து மட்டும் எம் சாண்ட் வாங்கி பயன்படுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு!