ETV Bharat / city

காவல் நிலையங்களில் தேங்கி நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்... மீண்டும் ஒப்படைக்க டிஜிபி உத்தரவு! - Action to remove vehicles from police station

காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தேங்கி நிற்கும் வாகனங்கள்
தேங்கி நிற்கும் வாகனங்கள்
author img

By

Published : Sep 3, 2021, 8:50 AM IST

சென்னை: சாலை விதிகளை மீறுதல், கடத்தல் விவகாரம் ஆகிய சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட வானகங்கள், விபத்துகளில் சிக்கிய வாகனங்கள் அனைத்தும் காவல் நிலைய வளாகங்களில் நீண்ட காலமாக நிற்பது வழக்கம். இதனால், காவல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு, சுகாதாரமற்ற சூழ்நிலையும் உருவாகிறது.

டிஜிபி உத்தரவு

இந்நிலையில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும், ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபடவும் அறிவுறுத்தி அனைத்து மாவட்டக் காவல் துறை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.

வாகனங்கள் ஒப்படைப்பு

இதனையடுத்து, வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கென தனி குழுவும் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மறுக்கும் உரிமையாளர்கள்

விபத்தில் சிக்கி சேதமான வாகனங்களை துரதிஷ்டம் எனக்கருதி, அதை திருப்பி வாங்க உரிமையாளர்கள் முன் வருவதில்லை. அவ்வாறு இருப்பவர்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று வாகனங்களை ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை... இப்போது கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.