சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக 13,331 இடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது. இவ்வாறு, நிரப்படும் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேவி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், 13,331 தற்காலிக ஆசிரியர் பணியை வாபஸ் பெற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. அதில் 3 நாளான இன்று மாெட்டை அடித்தும், பிச்சை எடுத்தும், இறந்தவர்கள் போல் படுத்து ஒப்பாரி வைத்தும், அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத், பள்ளி மேலாண்மை குழு வழியாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமைகள் எதனையும் பின்பற்றாமல் தங்களது விருப்பப்படி ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதி பெற்ற நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது. இதுகுறித்த தெளிவுரைகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு உரிய முன்னுரிமைகளை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிலர் என்னை விளம்பரப் பிரியர் என்கிறார்கள்; எனக்கு விளம்பரம் தேவையா ? - ஸ்டாலின்..